'தமிழ் தாத்தா' உ.வே.சா நூலகத்திற்கு சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தினர் சிறப்பு ஆய்வு சுற்றுலா!

தமிழ் மரபை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்துக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Sivakarthikeyan Welfare Association
Published on: 
Summary

தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சிறப்பு ஆய்வு சுற்றுலா ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ் தாத்தா’ உ.வே.சா நூலகத்திற்கு இந்நிர்வாகிகள் நேரில் சென்று இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர்.

பயணத்தின் உயரிய நோக்கம்

நமது செம்மொழி தமிழின் மாண்பையும், அதன் பழம்பெரும் வரலாற்றையும் இன்றைய தலைமுறையினரும், நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர்களும் ஆழமாக உணர்ந்து, அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்த சிறப்பான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகளும் வரலாற்று விளக்கங்களும்

சங்க இலக்கியங்களையும், அரிய ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடித் தொகுத்து தமிழுக்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் அரிய நூல்கள் மற்றும் பழங்காலச் சுவடிகள் பார்வையிடப்பட்டன.

உ.வே.சா அவர்கள் பயன்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இந்த அரிய பொக்கிஷங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதை நூலக நிர்வாகிகள், நற்பணி இயக்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவின் நிர்வாகிகளுக்கு முழுமையாக விவரித்து விளக்கமளித்தனர்.

இன்றைய நவீன சூழலில் தமிழின் மரபை நோக்கி இளைஞர்களைக் கொண்டு சேர்க்கும் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் இந்தத் தொண்டு, தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

X