சூடுபிடிக்கும் கில்லி ஃபீவர் - எக்ஸ் தளத்தில் அன்பை பகிர்ந்த முத்துப்பாண்டி

.படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.
சூடுபிடிக்கும் கில்லி ஃபீவர் - எக்ஸ் தளத்தில் அன்பை பகிர்ந்த முத்துப்பாண்டி
Published on

தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

படம் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வார தினங்களான இன்றும் பல திரையரங்குககளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com