SK27 பட இயக்குனருக்கு 'I Phone' பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து ஒரு அன்பான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று - இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்
SK27 பட இயக்குனருக்கு 'I Phone' பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
Published on: 
Summary

பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படமான 'SK27' இன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்குப் புத்தம் புதிய ஐபோன் ஒன்றை இன்ப அதிர்ச்சியாகப் பரிசளித்துள்ளார்.

இயக்குநரின் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து ஒரு அன்பான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. இந்த அன்பான பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

3 தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர்

'பார்க்கிங்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் 'சிறந்த திரைக்கதை' மற்றும் 'சிறந்த தமிழ்ப் படம்' உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை வென்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும்.

நட்சத்திரப் பட்டாளம்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டிராகன்' மற்றும் 'இம்மார்டல்' படங்களின் மூலம் புகழ்பெற்ற காயடு லோஹர் நடிக்கிறார்.

இவர்களுடன் நகைச்சுவை நடிகர்கள் சுதாகர், வி.டி.வி கணேஷ் ஆகியோரும் இணைந்துள்ளனர். மேலும், ஜார்ஜ் மரியன் மற்றும் பப்லு பிரித்விராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் பிளாக்பஸ்டர் படமான 'அமரன்' திரைப்படத்தில் பணியாற்றிய கலைவாணன் இப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகவும், ஸ்டீவன் குமார் சண்டைக் காட்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 25 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட 'SK27' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X