உடல் நலக்குறைவால் மரணம்- என்னை செதுக்கியவர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாசராவ்- நடிகர் கமல்ஹாசன்

நீண்ட கதை, பெரிய நட்பு என்று சொல்வதற்கு வயது பொருந்தாது. இருந்தாலும் இதுதான் எங்கள் உறவு.
Actor Kamal Haasan
Published on: 
Summary

என்னை கலைத்துறையில் செதுக்கியவர்களில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவும் ஒருவர். நீண்ட கதை, பெரிய நட்பு என்று சொல்வதற்கு வயது பொருந்தாது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும், காதலா காதலா மற்றும் பல மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 95). 95 வயதிலும் கடைசியாக சிங்கீதம் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையுடன் திகழ்ந்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.

உடல் நலக்குறைவு

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னை பாஸ்கர் காலனியில் உள்ள வீட்டில் திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கமல்ஹாசன் அஞ்சலி

அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- என்னை கலைத்துறையில் செதுக்கியவர்களில் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவும் ஒருவர். நீண்ட கதை, பெரிய நட்பு என்று சொல்வதற்கு வயது பொருந்தாது. இருந்தாலும் இதுதான் எங்கள் உறவு. இளமையில் மரணம் ரொம்ப சோகம் என்று சொல்வார்கள்.

அவர் சின்ன வயதிலேயே முடிவு செய்துவிட்டார் நான் 95 வயதில்தான் மரணம் அடைவேன் என்று. என்னை செதுக்கிய பலரில் அவரும் ஒருவர். அவரைக் கேட்டால் என்னை சொல்வார். இது தான் அவரது இளமையின் ரகசியம். அவர் இயக்கிய என் படங்கள் அனைத்துமே எனக்கு முக்கியமான படங்கள் தான். இவ்வாறு அவர் கூறினார். சிங்கீதம் சீனிவாச ராவ் உடலுக்கு கவிஞர் மதன் கார்க்கி, சினேகன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com