பார்க்கிங் இயக்குனருடன் இணையும் சிம்பு - அறிவிப்பு வீடியோ விரைவில்...

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
பார்க்கிங் இயக்குனருடன் இணையும் சிம்பு - அறிவிப்பு வீடியோ விரைவில்...
Published on

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தனர். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.

இப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பை சிம்புவின் பிறந்தநாளன்று பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

சிம்பு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com