சந்தோஷ் பிரதாப் நடிப்பில் 'சிக்னல் அட் 11.30': பிரம்மாண்டமாக நடைபெற்ற டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

படத்தின் மிகப்பெரிய வைரம் இமான் சார் தான் - நடிகர் சந்தோஷ் பிரதாப்
Signal At 1130 Movie
Published on: 
Summary

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்து, மலர்விழி நடேசன் இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’.

இசை வெளியீட்டு விழா

சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் விதார்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்

கல்வித்துறையில் இருந்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் இயக்குநராகப் தடம் பதித்துள்ள மலர்விழி நடேசனைப் பாராட்டிப் பேசிய சிறப்பு விருந்தினர்கள், இந்த வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாகச் சுவாரசியமாக வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி. இமான், ஒரு பெண் இயக்குநரின் அசாத்திய உழைப்பிற்கு ஆதரவளிக்கவே இப்படத்திற்கு இசையமைத்ததாகக் குறிப்பிட்டார். படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், "படத்தின் மிகப்பெரிய வைரம் இமான் சார் தான், அவரது இசையில் பல வருடங்கள் கழித்து நடனமாடியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

தொழில்நுட்ப குழு

முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அமீர் லால் ஒளிப்பதிவும், கலைவாணன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு அர்ப்பணிப்பில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11:30' திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X