குடும்ப புகைப்படம் - ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற சிக்மா படத்தின் டைட்டில் கார்ட்

தமிழில் அதிரடி ஆக்‌ஷன் கலந்த மசாலா திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Sigma Title Card
Published on: 
Summary

தமிழ் சினிமாவின் முன்னாள் நட்சத்திர நடிகரான விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தின் டைட்டில் கார்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் அதிரடி ஆக்‌ஷன் கலந்த மசாலா திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக சுந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம் மற்றும் ஷிவ் பண்டிட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முன்னணி நடிகரான விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான சிக்மா திரைப்படத்தின் டைட்டில் கார்ட் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டைட்டில் கார்டில் நடிகர் விஜய்-யுடன் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இருப்பதும், மேலும் விஜய்-யின் மகள் மற்றும் மனைவி இருப்பதுமான புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த டைட்டில் கார்டில் வேட்டைக்காரன் படத்தில் தனது அப்பாவுடன் பாடல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் இணைந்து நடித்த காட்சி இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்த ரியாக்‌ஷனும் டைட்டில் கார்டில் இடம்பெற்று ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இறுதியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படமும், இந்த டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com