சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ்அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் பளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக் படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன ஆனால் படக்குழு இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com