

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து அழகிய லைலா படத்தினை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார்.
அழகிய லைலா படத்தில் கதாநாயகியாக அப்சரா ராணி நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். C.சத்யா படத்திற்கு இசையமைக்கிறார். வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் கேரளத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இயக்குனர் ரெஜித் தமிழில் இயக்கும் முதல் படம் இதுதான்.
இதுகுறித்து பேசிய நடிகர் பிரபு, என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது போல, இந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர்களை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.