திரையுலகில் அதிர்ச்சி.. பிரபல நடிகர் நானா படேகர் திடீர் மரணம்

சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்றனர்.
நானா படேகர்
நானா படேகர்
Published on: 
Summary

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். அவருக்கு வயது 75.

75 வயதான மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்

கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு

அதிகாலை 5:20 மணிக்கு நானா படேகர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்றனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

திரை வாழ்வு

அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008 இல் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.

கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார்.

மகாராஷ்டிராவின் ராய்கட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர் ஆகும்.

பிரதாமாக இந்தி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தனது நடிப்புத் திறமைக்காக அதிகம் பாராட்டப்படும் இவர் இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

படேகர், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேலும் இந்திய ராணுவத்திலும் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

ர் 3 தேசிய விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள் பெற்ற இவருக்கு 2013 இல் இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com