'சக்தித் திருமகன்' படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

சக்தி திருமகன் படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியின் 25வது படமாக இப்படம் உருவாகியுள்ளது.
'சக்தித் திருமகன்' படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Published on

`நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com