லண்டனில் டேட்டிங் செய்யும் ஷாருக்கான் மகள் - வைரலாகும் புகைப்படம்

இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
லண்டனில் டேட்டிங் செய்யும் ஷாருக்கான் மகள் - வைரலாகும் புகைப்படம்
Published on

இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com