இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக் கான்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக் கான் மட்டுமின்றி மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.
Shah Rukh Khan
Published on

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம்பிடித்துள்ளார். 2024 ஹூருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள நடிகர் ஷாருக் கானின் சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி ஆகும்.

திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.

தற்போது வெளியாகி இருக்கும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மட்டுமின்றி பாலிவுட் துறையை சேர்ந்த மேலும் சிலரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பட்டியல் பின்வருமாறு..

ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி

ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 ஆயிரத்து 600 கோடி

ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி

அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,600 கோடி

கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,400 கோடி 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com