15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் ஷாருக்கான் – கரீனா கபூர்: 'கிங்' படத்தின் 'Daddy Cool' பாடல் வெளியீடு!

கிங்' திரைப்படம், டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ShahRukhKhan  - KareenaKapoor
Published on: 
Summary

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் 'கிங்' (King). இப்படத்தில் இடம்பெற்றுள்ள "டாடி கூல்" (Daddy Cool) என்ற சிறப்பு நடனப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2011-ம் ஆண்டு வெளியான 'Ra.One' படத்தின் 'சம்மக் சல்லோ' பாடலுக்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஷாருக்கானும் நடிகை கரீனா கபூரும் இந்தப் பாடலின் மூலம் மீண்டும் திரையில் இணைந்துள்ளனர்.

டிஸ்கோ பின்னணியில் அசத்தும் பாடல்

1976-ம் ஆண்டு வெளியான பிரபல 'போனி எம்' இசைக்குழுவின் 'டாடி கூல்' என்ற கிளாசிக் டிஸ்கோ பாடலின் பாலிவுட் தழுவலாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் இசையமைக்க, குமார் வரிகள் எழுதியுள்ளார்.

பிரபல பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ள நிலையில், வைபவி மெர்ச்சன்ட் நடனம் அமைத்துள்ளார்.

டிஸ்கோ கிளப் பின்னணியில் ஷாருக்கான் சால்ட்-அண்ட்-பெப்பர் லுக்கில் ஸ்டைலாக என்ட்ரி கொடுக்க, சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கரீனா கபூர் அவருடன் இணைந்து துள்ளலாக நடனமாடியுள்ளார்.

இப்பாடலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், "Back with Bebo...
song Old School...but still Cool!" எனப் பதிவிட்டுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி

முன்னதாக 'அசோகா' (2001), 'கபி குஷி கபி கம்' (2001), 'ரா.ஒன்' (2011) ஆகிய படங்களில் இணைந்து நடித்த ஷாருக்கான் - கரீனா ஜோடி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கிங்' படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அபய் வர்மா, அர்ஷத் வர்சி, ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் ராகவ் ஜுயல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்படத்தின் மூலமாகவே வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள 'கிங்' திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

X