மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்த சிவகார்த்திகேயன்!

மதுரையில் ஜிகர்தண்டா பருகிய சிவகார்த்திகேயன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Seyon Shooting
Published on

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் “சேயோன்”.

மதுரையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின் போது மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிகர்தண்டா கடைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திடிரென சென்றுள்ளார்.

ரசிகைகளுடன் கலந்துரையாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் ஜிகர்தண்டா சாப்பிட வந்ததை அறிந்ததும், அப்பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது, தன்னைச் சந்திக்க வந்த ரசிகைகளிடம் சிவகார்த்திகேயன் மிகவும் எளிமையாகவும் கனிவாகவும் பேசினார்.

மேலும் அங்கிருந்த ஒரு குழந்தைக்கு அன்புடன் முத்தமிட்ட அவர், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தனது சொந்த செலவில் ஜிகர்தண்டா வாங்கி கொடுத்தார்.

இணையத்தில் வைரலாகும் காட்சிகள்

மதுரை மண்ணில் பொதுமக்களுடன் சிவகார்த்திகேயன் இயல்பாகப் பேசி, ஜிகர்தண்டா பருகிய இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

அவரது இந்த அன்பான மற்றும் எளிமையான செயலைக் கண்டு மதுரை மக்கள் மற்றும் இணையவாசிகள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com