

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கேங்ஸ்டர் த்ரில்லர் திரைப்படமான 'ஐ ஆம் கேம்' நாளை மறுநாள் உலகளவில் வெளியாகிறது. 'RDX' திரைப்படப் புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோஹர் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் - கயாடு லோஹர் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரைப்படமான 'இம்மார்ட்டல்' செப்டம்பர் 4-ந்தேதி வெளியாக உள்ளது. மாரியப்பன் சின்னா இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த டார்க் ஃபேண்டஸி திரைப்படத்தின் டிரெய்லரை அண்மையில் நடிகர் தனுஷ் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ படத்தின் இரண்டாவது பாகமாக வரும் இந்த ஆக்ஷன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.
RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாக்ஷி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திகில் த்ரில்லர் தமிழ் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.
ஹிப்- ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘டோரதி’. சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற 25-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாது லோஹர், ராகவ் ஜுயல், மோகன் பாபு, தனிகெல்லா பரணி, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாரடைஸ்’. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் த்ரில்லர் தெலுங்கு படம் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.