சிபி சத்யராஜ் நடித்த Ten Hours படத்தின் செகண்ட் டிரெய்லர் வெளியீடு

சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சிபி சத்யராஜ் நடித்த Ten Hours படத்தின் செகண்ட் டிரெய்லர் வெளியீடு
Published on

சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.

இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் குரலில் டிரெய்லர் காட்சிகள் தொடங்குகிறது.

படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com