‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

படம் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சேயோன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
Published on

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நிலையில் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

‘தாய் கிழவி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சேயோன்’.

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், ராஜ் பி ஷெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com