

'ழகரம் ஸ்டுடியோஸ்' தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் "அன்பான ரசிகர்களுக்கு" ஒரு முக்கியக் கடமை காத்திருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வருகிற அக்டோபர் 31 (சனிக்கிழமை) அன்று மாலை 5:00 மணி முதல் இந்த விழா கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
சென்னை சாய்ராம் கல்வி நிறுவனம் வளாகத்தில் இந்த ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"அன்பான சூர்யா ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் " எனத் தயாரிப்பு நிறுவனம் தங்களின் எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6 தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி சூர்யா ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமையப் போவது உறுதி.
'ரோமான்சம்' மற்றும் 'ஆவேஷம்' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பிரபல நடிகர் சூர்யா, நஸ்ரியா ஃபகத் மற்றும் 'பிரேமலு' படப் புகழ் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்க, இதன் ஆடியோ உரிமத்தைக் பிரபல சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களைச் சந்திக்கவுள்ளதால், சமூக ஊடகங்களில் "கண்ணுங்களா, செல்லங்களா" என்ற அவரது பிரியமான வார்த்தைகளைக் கேட்க சூர்யா ரசிகர்கள் இப்போதே தங்களின் கவுண்ட்டவுனைத் தொடங்கிவிட்டனர்.