

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு காலை 6 மணிக்காட்சிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், சூர்யாவின் ‘சீன்’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஒரே நாளில் வெளியானது. இரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் வெற்றி யாருக்கு என ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்களை வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் காலை 6 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 2.30 மணி வரை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
காலை 6 மணிக்கு திரைப்படங்களை வெளியிட அரசு அனுமதித்த நிலையில், நடிகர் சூர்யாவின் ‘சீன்’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ படத்தில் நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இதேபோல், சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் இன்று காலை 6 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் காலை 6 மணிக்காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் நயன்தாராவின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்களின் மனதில் கொள்ளைக்கொண்டு வெல்லப்போவது ‘சீன்’ படமா? இல்லை ‘மூக்குத்தி அம்மன் 2’ படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...