சதீஷ் நடித்த `சட்டம் என் கையில்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

சட்டம் என் கையில் எனும் படத்தில் சதீஷ் நடித்துள்ளார்.இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.
சதீஷ் நடித்த `சட்டம் என் கையில்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது
Published on

நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக உருமாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி செப்டம்பர் மாதம் 27 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

ஓர் இரவு நடக்கும் சம்பவமாக இப்படம் அமைந்துள்ளது. ஒரு கொலை பழியில் இருந்து தப்பிக்க போராடும் கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை திரையரங்கிள் காணத்தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com