மதுமிதா இயக்கத்தில் ‘ஜான் டோ’: மிரட்டலான தோற்றத்தில் சஞ்சனா நடராஜன் போஸ்டர் ரிலீஸ்

அர்ஜுன் தாஸுடன் இணைந்து சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மதுமிதா இயக்கத்தில் ‘ஜான் டோ’: மிரட்டலான தோற்றத்தில் சஞ்சனா நடராஜன் போஸ்டர் ரிலீஸ்
Published on: 
Summary

மதுமிதா இயக்கத்தில் உருவாகும் 'ஜான் டோ' திரைப்படத்தின் புதிய போஸ்டரில் சஞ்சனா நடராஜன் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அர்ஜுன் தாஸ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த கிரைம் திரில்லர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஜான் டோ' (John Doe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.

கிரைம் திரில்லர் பாணி

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. போலீஸ் அதிகாரியாக சந்துரு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு விறுவிறுப்பான மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. அர்ஜுன் தாஸுடன் இணைந்து சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

 மிரட்டலான தோற்றத்தில் சஞ்சனா நடராஜன் போஸ்டர்

இந்த நிலையில், ‘ஜான் டோ’ நடிக்கும் சஞ்சனா நடராஜனின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சனா நடராஜனும் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com