ஹிட் ஆன ஏ.ஆர். ரகுமான் பாடலை ரீமேக் செய்யும் சாம் சி.எஸ். - மெட்ராஸ்காரன் 2வது சிங்கில் அப்டேட்

ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.இயக்குனர் வாலி மோகன் தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹிட் ஆன ஏ.ஆர். ரகுமான் பாடலை ரீமேக் செய்யும் சாம் சி.எஸ். - மெட்ராஸ்காரன் 2வது சிங்கில் அப்டேட்
Published on: 

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.

ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் என்ற வீடியோ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தில் அடுத்த பாடலான காதல் சடுகுடு பாடல் வரும் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடல் மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடித்து வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் இடம் பெற்ற காதல் சடுகுடு பாடலின் ரீமேக் வெர்ஷனாகும். இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்பாடலின் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com