ஒரே நாளில் இரண்டு பாடல்களை வெளியிடும் சக்தி முருகன் படக்குழு

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனி மார்கன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ஒரே நாளில் இரண்டு பாடல்களை வெளியிடும் சக்தி முருகன் படக்குழு
Published on: 

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனி மார்கன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்களான மாறுதோ மற்றும் ஜில் ஜில் ஜில் பாடலை படக்குழு இன்று வெளியிட இருக்கிறது. அதன்படி முதல் பாடலான மாறுதோ வெளியிட்டனர். மாலை 6 மணிக்கு ஜில் ஜில் ஜில் பாடலை வெளியிடவுள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com