இறுதிக்கட்டத்தில் ரெட்ட தல படப்பிடிப்பு.. விரைவில் வெளியீடு

திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல’ படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் ரெட்ட தல படப்பிடிப்பு.. விரைவில் வெளியீடு
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைப்பெறவுள்ளது. இதற்காக படக்குழு மொத்தமும் கோவாவிற்கு சென்றுள்ளனர். இதை படக்குழு புகைப்படத்துடன் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com