விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ வெளியீடு தேதி அறிவிப்பு!

படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ வெளியீடு தேதி அறிவிப்பு!
Published on

பிளாக்மெயில் , இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதியப் படம் ‘அப்பாக்குட்டி’.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லக்ஷ்மணன், பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், முருகானந்தம், பிரவீணா, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இப்படத்தை அவரே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் அக்.16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தந்தை - மகள் உறவை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com