"நூறு சாமி"-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி- இயக்குநர் சசி

'நூறு சாமி' திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைக்கிறார்.
"நூறு சாமி"-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி- இயக்குநர் சசி
Published on

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'.

மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

இப்படம், உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கிராமத்து பின்னணியில் ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) உணர்வுப்பூர்வமான கதையை சொல்லும் திரைப்படம் ஆகும்.

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'நூறு சாமி' திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைக்கிறார். எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

'நூறு சாமி' திரைப்படம் குறித்து இயக்குநர் சசி கூறியதாவது:-

தாயை தெய்வமாக மதித்தான் அது 'பிச்சைக்காரன்', தாயை மனுஷியாக பார்க்க தொடங்கினான் அது 'நூறு சாமி'. இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் வெகுகாலம் பேசப்படும்.

ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பை தந்துள்ளார். 'நூறு சாமி' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார்.

நகரம், கிராமம் என இரு பின்னணிகளிலும் படங்களை உருவாக்கி வரும் இயக்குநர் சசி, "நகரத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் எனக்கு கிராமத்துக் கதைகளை எடுக்க மிகவும் பிடித்துள்ளது. அவற்றில் உள்ள சவால்களும், இடம் பெறும் மண் மணம் மாறா கதை மாந்தர்களும் இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com