லிங்கேஷ் - லியா நடிப்பில் உருவாகியுள்ள `என் காதலே' படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருமையான காதல் கதையாக, `என் காதலே' திரைப்படம் உருவாகியுள்ளது. மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
லிங்கேஷ் - லியா நடிப்பில் உருவாகியுள்ள `என் காதலே' படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, `என் காதலே' திரைப்படம்...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. 

லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. 

கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்... இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார் லியா....நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார்.இவருக்கும் இது முதல் திரைப்படம் இருந்தாலும் திரையில் நிஜ வில்லனாக மிரட்டியுள்ளார்.. திரைத்துறையில் இவருக்கு அதிக வாய்ப்பு காத்துகொண்டிருக்கிறது..  இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்த நிலையில்..இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி  ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது...தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது...

X

Maalai Malar
www.maalaimalar.com