சிவப்பு நட்சத்திரம்..!- படத்தின் தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரக்கனி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார்.
Sivappu natchathiram
Published on: 

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் இன்று வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின் பசியை தீர்ப்பதற்கு தான். மாறாக பணம் படைத்தவர்கள் அதனை பதுக்கி வைத்து செயற்கையாக பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல. இதனை எல்லாம் கண்டும் காணாமல் அடிமையாக வாழ்ந்தால் இங்கு எதுவுமே பிரச்சனையில்லை. அதற்கு எதிராக வாழ்ந்தால் இங்கு எல்லாமே பிரச்சினை தான் என்ற கருவை சுமந்து, மானுடவியலின் பசியை போக்க முன்னெடுக்கிறது காதலும், புரட்சியும், அரசியலும், பொருளாதாரமும்.

கதை கருவின் நாயகனாக டல்ஹவுசி பிரபு நடிக்கிறார். கதை நாயகியாக வர்ஷா நடிக்கிறார். சமூக அரசியல் தலைவனாக பொன்வண்ணன், போலீஸ் கமிஷனராக

OAK சுந்தர், நீதிபதியாக பழ கருப்பையா, வில்லன்களாக சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவு PK, இசை தீபன் சக்கரவர்த்தி, ஸ்டண்ட் கனல் கண்ணன், எடிட்டிங் செந்தில் வீரா, நடனம் தினேஷ் மாஸ்டர், பாடல்கள் ஞானக்கர வேல், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். இணை தயாரிப்பு கர்ணா, டாக்டர் தினேஷ். லீஹரி பிக்சர்ஸ் சார்பில், B.சின்னத்தம்பி தயாரிக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிவப்பு நட்சத்திரங்கள் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Sivappu natchathiram
X

Maalai Malar
www.maalaimalar.com