ரிபல் ஸ்டார் பிரபாஸ் பிறந்தநாள்.. வரிசைகட்டி வெளியான பட அப்டேட்கள்

அனிமல் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' படத்திலும் நடிக்கிறார்.
பிரபாஸ்
Published on: 
Summary

தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் பிரபாஸ் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்த வந்த பிரபாஸ் ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உலகப் புகழ் பெற்றார்.

தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. 'கல்கி 2898 AD' படம் மட்டும் விதிவிலக்காக வெற்றி பெற்றது.

இதனிடையே பிரபாஸ் 'கல்கி 2898 AD' பாகத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2 படத்திலும் நடக்க உள்ளார்.

அனிமல் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' படத்திலும் நடிக்கிறார்.

மறுபுறம் 'சீதாராமம்' படத்தை இயக்கிய ஹனு ராகவ்புடி இயக்கத்தில் 'ஃபௌசி' என்ற படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

ஃபௌசி போஸ்டர்

இந்நிலையில் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஃபௌசி படத்தின் புதிய போஸ்டரை, பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் பிரபாஸ், ராணுவ வீரராக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அவர் நடிக்கும் பாத்திரம் குறித்த வீடியோ விரைவில் வெளியாகும் என என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த சரித்திரப் படம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பிரபாஸைக் காட்ட இயக்குனர் ஹனு ராகவபுடி உறுதியான திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்கி 2

இதனிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 AD' இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிரபாஸ் தற்போது பங்கேற்றுள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் படத்திற்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான அரங்கம் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

அவர் 'கல்கி 2' படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். பிரபாஸ் பைரவராக மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியிருப்பதால், இந்தப் படத்திற்காகக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமனாகவும், கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கினாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com