

காக்டெயில்-2 படத்துக்கு பிறகு ராஷ்மிகாவுக்கு இன்னும் மவுசு கூடியிருப்பதால் அவர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் 2-ம் இடத்தில் இருந்தார்.
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சினிமா படங்கள் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் படங்களே பெரியளவில் கவனம் ஈர்க்கின்றன.
அந்தவகையில் இந்த 5 மொழிகளிலும் ஜொலிக்கும் நடிகைகள், அதாவது பான் இந்தியா அளவில் ஜொலிக்கும் நடிகைகளில் முதல் 5 பேரின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் முதலிடத்தில் ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். காக்டெயில்-2 படத்துக்கு பிறகு ராஷ்மிகாவுக்கு இன்னும் மவுசு கூடியிருப்பதால் அவர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் 2-ம் இடத்தில் இருந்தார்.
2-ம் இடத்தில் தீபிகா படுகோனே இருக்கிறார். கர்ப்ப காலத்தில் படங்கள் நடிக்காமல் இருந்ததால் அவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஷ்ரதா கபூர், சாய் பல்லவி, ஆலியா பட் ஆகியோர் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களில் தொடருகிறார்கள். பான் இந்தியா அளவில் ஜொலிக்கும் நடிகைகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சாய் பல்லவி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.