விமான நிலையத்தில் ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர் - வீடியோ

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விமான நிலையத்தில் ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர் - வீடியோ
Published on

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

இருப்பினும் தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் தனது கையைத் தொட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுக்கச் சொன்னதால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அசவுகரியம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அமைதியாகவும், பணிவாகவும் அந்த சூழ்நிலையை கையாண்டார்.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சிகளை கண்ட ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com