

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'இராமாயணா' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழின் முன்னணி இயக்குநர் அட்லி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் மனமாறப் பாராட்டி நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் அட்லி தனது பதிவில், "என்னவொரு தொலைநோக்கு பார்வை! என்னவொரு அசாத்தியமான உழைப்பு! இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு மாபெரும் அனுபவம். 'இராமாயணம்' திரைப்படம் மூலம் இந்திய சினிமா இன்று உலக அரங்கில் மிக பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது.
நமது கலாச்சாரம் மற்றும் உணர்வுகளோடு மிக அழகாக வேரூன்றி இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படும் ஒரு காவியமாக இருக்கும். இதை என் குடும்பத்துடன் கொண்டாடி, எனது தனிப்பட்ட சேகரிப்பில் என்றும் சேமித்து வைப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அட்லீ தனித்தனியாகப் பாராட்டியுள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் யஷ் ஆகியோரின் நடிப்பு அற்புதம். மேலும் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், காஜல், ஷோபனா மற்றும் ஒட்டுமொத்த நட்சத்திரங்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் கூட்டணியில் உருவான இசை உலகத்தரம் வாய்ந்தது.
பிரம்மாண்டமான காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்த DNEG நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவிற்கும், அழகிய திரைக்கதையை அமைத்த ஸ்ரீதர் ராகவனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை பாராட்டியுள்ளார்.AR Rahman நிதேஷ் திவாரி Nitesh Tiwari
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் அசாத்திய உழைப்பையும், இயக்குநர் நிதேஷ் திவாரியின் அர்ப்பணிப்பு மற்றும் எளிமையையும் பாராட்டியுள்ள அட்லி, "இந்திய சினிமாவால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த படம் உலகிற்கு நிரூபித்துள்ளது.
இதன் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்தேன். படத்தின் இரண்டாம் பாகத்திற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தனது வாழ்த்து அறிக்கையை ‘Atlee’ என்ற கையெழுத்துடன் நிறைவு செய்துள்ளார். அட்லீயின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகிறது.