ராகவா லாரன்சின் 25 - வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான ’பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
ராகவா லாரன்சின் 25 - வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
Published on

ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியான 'பார்த்தாலே பரவசம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் இருந்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்தார். லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக 'அதிகாரம்' மற்றும் 'துர்கா' போன்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

அதையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக 'ஹண்டர்' படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்.

இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை ஜிடெலி பிலிம்ஸ் மற்றும் சத்திய ஜோதி நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் ஹண்டர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாவுள்ளது.

படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com