நாளை மாலை வெளியாகும் 'புஷ்பா 2' டிரைலர்..

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்
நாளை மாலை வெளியாகும் 'புஷ்பா 2' டிரைலர்..
Published on

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி அதற்கு தேதி குறிக்கப்பட்டது.

அதன்படி நாளை [ நவம்பர் 17] மாலை 6.03 மணிக்கு புஷ்பா 2 டிரைலர் வெளியாகவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com