இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘புருஷன்’... பொங்கலுக்கு வெளியிட திட்டம்

சென்னை, கோவா போன்ற பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
யோகி பாபு, விஷால், தமன்னா
Published on

காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆம்பள’. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.

இதே பாணியில் சுந்தர் சி- விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட ‘மதகஜராஜா’ படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘புருஷன்’. தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு சையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, கோவா போன்ற பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கொல்கத்தாவில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

முன்னதாக, ‘புருஷன்’ படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும் நடித்துள்ளார். இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com