பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் "டிராகன்"

இந்த புதிய படத்திற்கு 'டிராகன்' என "டைட்டில்" வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் பூஜை, படப்பிப்பு தற்போது சிறப்பாக தொடங்கியது.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் "டிராகன்"
Published on

கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி காதலர் தினத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனத்தின் 26 - வது படமாகும்.

இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த புதிய படத்திற்கு 'டிராகன்' என "டைட்டில்" வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜை, படப்பிப்பு தற்போது சிறப்பாக தொடங்கியது. மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர்  நடிக்கின்றனர்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com