தலைவன் தலைவி படத்தின் பொட்டல முட்டாயே வீடியோ பாடல் ரிலீஸ் !

விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தலைவன் தலைவி படத்தின் பொட்டல முட்டாயே வீடியோ பாடல் ரிலீஸ் !
Published on

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.

கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற பொட்டல முட்டாயே பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. பாடல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com