குடும்பஸ்தன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
குடும்பஸ்தன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
Published on

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது நகைச்சுவையான பொழுதுபோக்கு கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது.

குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இன்று படத்தின் நன்றி தெரிவிக்கு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com