இட்லி கடை படத்தில் தனுஷின் தங்கையாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை!

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது.அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இட்லி கடை படத்தில் தனுஷின் தங்கையாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை!
Published on

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் தெலுங்கு நடிகையான ஷாலினி பாண்டே தனுஷின் தங்கை கதாப்பாத்திரத்திலும் மற்றும் அருண் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஷாலினி பாண்டே அண்மையில் டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார்.

திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை என்ன சுகம் பாடலை படக்குழு வெளியிட்டது அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com