'பாக்கெட் நாவல்' முதல் சிங்கிள் அப்டேட்: போஸ்டரில் இருக்கும் அந்த நாயகி யார்?

இந்த நட்சத்திரம் யார் எனக் கண்டுபிடியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் caption கொடுத்து ரசிகர்களின் ஆர்வத்தை துண்டியுள்ளார்.
Pocket Novel  -  First Single
Published on: 
Summary

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் பாடல் 'aasaaththan' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல், வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

சஸ்பென்ஸ் போஸ்டர்

இப்பாடலின் அறிவிப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள சிவப்பு நிறப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் நடனமாடும் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்பதை ரசிகர்களின் யூகத்திற்கே விட்டுள்ள படக்குழு, "இந்த நட்சத்திரம் யார் எனக் கண்டுபிடியுங்கள்" எனப் பதிவிட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ள அந்த நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

GV பிரகாஷ் இசை

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில், மாளவிகா மோகனன், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

பொங்கலுக்கு ரிலீஸ்

சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் இப்படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கிய நிலையில், தற்போது முதல் பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

'பாக்கெட் நாவல்' திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

X