சுதா & SK எடுத்துக்கொண்ட புகைப்படம் ... புறநானூறு படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுசுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது.
சுதா & SK எடுத்துக்கொண்ட புகைப்படம் ... புறநானூறு படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.

கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. தொடர்ந்து படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஜெயம் ரவி, அதர்வா, ரோஷன் மாதியூ படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்ப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புறநானூறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com