சதீஷ் நடிக்கும் 'பத்து நாள் ராஜா' - விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

ஒவ்வொரு மத்தியதர குடும்பங்களும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையை ஜனரஞ்சகமாக பேசியுள்ளோம்.
பத்து நாள் ராஜா
Published on: 
Summary

எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஜி. சுரேஷ் தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பா' புகழ் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்து நாள் ராஜா' விரைவில் வெளியாகிறது.

சதீஷ், ஆதி சாய்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'பத்து நாள் ராஜா', குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பத்து நாள் ராஜா

எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஜி. சுரேஷ் தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பா' புகழ் குரு சரவணன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு தமிழில் 'பத்து நாள் ராஜா' என்றும் தெலுங்கில் 'ஈகோ ராஜா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

சதீஷ், ஆதி சாய்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் ஆதியா பிரசாத், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், 'ஆதித்யா' கதிர் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

முன்னணி கலைஞர்களான ஜிப்ரான் வைபோதா இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள 'பத்து நாள் ராஜா' திரைப்படத்திற்கு மகேஷ் மாத்யூ, விக்கி நந்தகோபால் மற்றும் டான் அசோக் ஆகியோர் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். மேகநாதன் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்க ஜி. துரைராஜ் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இயக்குநர் குரு சரவணன்

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் குரு சரவணன், "குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய திரைப்படமாக 'பத்து நாள் ராஜா' உருவாகியுள்ளது. இன்று ஒவ்வொரு மத்தியதர குடும்பங்களும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை உண்மை சம்பவங்களுடன் 'பத்து நாள் ராஜா' திரைப்படத்தில் ஜனரஞ்சகமாக பேசியுள்ளோம்.

தமிழில் நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்த சதீஷ் மற்றும் தெலுங்கு நாயகன் ஆதி சாய்குமார் ஆகியோரை ஒன்றாக இயக்கியது நல்ல அனுபவமாக இருந்தது.

மொழிகளுக்கு அப்பாற்பட்ட இந்த கதையை தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," என்று கூறினார். பி. செந்தில் குமார் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து நாள் ராஜா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X