'தேனிசைத் தென்றல்' தேவா மறைவு: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆழ்ந்த இரங்கல்!

தேவாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இசை உலக ஜாம்பவானுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
 Deva -A.R.Rahman
Published on: 
Summary

'தேனிசைத் தென்றல்' இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா மறைவுக்கு ஆஸ்கார் நாயகனும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கம் வாயிலாக உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவரது இழப்பு தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது அன்பிற்குரிய 'தேனிசைத் தென்றல்' தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். தமிழ் இசையின் ஆன்மாவோடு ஆழமாகப் பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களின் இதயங்களை ஆழமாகத் தொட்டுள்ளதாகவும், அந்தத் துள்ளலிசையும் காதலான மெலடிகளும் வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேவாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரஹ்மான், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேவாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இசை உலக ஜாம்பவானுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com