OTT -யில் முதல் வாரத்திலேயே 15 மில்லியன் நிமிட பார்வை நேரத்தைக் கடந்த ‘It's A Medical Miracle' திரைப்படம்

மனோரமாமேக்ஸில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று சாதனை படைத்த திரைப்படம்.
Its A Medical Miracle
Published on: 
Summary

திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் மற்றும் சங்கீத் பிரதாப் நடிப்பிலான ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ (It's a Medical Miracle) திரைப்படம், தற்போது ஓடிடி தளத்திலும் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.

பிரபல ஓடிடி தளமான மனோரமாமேக்ஸ் -ல் வெளியான முதல் வாரத்திலேயே இத்திரைப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பல்வேறு மொழி ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

வித்தியாசமான கதைக்களம்

அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நகைச்சுவையும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த ஒரு சஸ்பென்ஸ் கதையாகும்.

'பிரேமலு' திரைப்படத்தில் 'அமல் டேவிஸ்' கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த சங்கீத் பிரதாப் இதில் கதாநாயகனாக (ரூபின்) அறிமுகமாகியுள்ளார். கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் ரூபினுக்கு, தொலைவில் ஒலிக்கும் சத்தங்களையும் ரகசிய உரையாடல்களையும் துல்லியமாகக் கேட்கும் ஒரு அபூர்வமான திறன் கிடைக்கிறது.

இந்தச் சூழலில், அவர் ஒரு நட்பான காவல் அதிகாரியான சூரஜை (ஷரஃபுதீன்) சந்திக்கிறார். இந்த எதிர்பாராத சந்திப்புக்கு பின் ரூபினின் வாழ்க்கையில் நடக்கும் பரபரப்பான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களே படத்தின் மீதிக்கதையாகும்.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு

இப்படத்தில் சங்கீத் பிரதாப் மற்றும் ஷரஃபுதீன் ஆகியோருடன் அகிலா பார்கவன், பார்வதி ஆர். கிருஷ்ணா, கோட்டயம் நசீர், ஆனந்த் மன்மதன் மற்றும் கிரண் பீதாம்பரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கரிக்கு' டிஜிட்டல் தளத்தின் மூலம் புகழ்பெற்ற நிலீன் சாண்ட்ரா இப்படத்திற்குத் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

டாக்டர் பால்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் டாக்டர் பால் வர்கீஸ் மற்றும் சுஜித் ஜே. நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

அகில் சேவியர் ஒளிப்பதிவையும், ராகேஷ் செருமடம் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைப்பில், நிக்சன் ஜார்ஜ் ஒலி வடிவமைப்பு பணிகளைக் கவனித்துள்ளார்.

ஓடிடியில் தொடரும் மகுடம்

500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20,000 மணி நேரத்திற்கும் அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட 'மனோரமாமேக்ஸ்' தளத்தில், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றுள்ளது.

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை வழங்கி, தற்போதும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com