"ஒன்றா இரண்டா ஆசைகள்.... எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா" - ஜோதிகாவின் வைரல் பதிவு

கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.
"ஒன்றா இரண்டா ஆசைகள்.... எல்லாம் சொல்லவே ஓர்நாள் போதுமா" -  ஜோதிகாவின் வைரல் பதிவு
Published on

மும்பையில் பிறந்து வளர்ந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், இன்று கோலிவுட் உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் ஜோதிகா. இவர் கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே தனது கணவரின் தயாரிப்பில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது பாலிவுட் உலகிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தம்பதிகளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், இயக்குனர் அட்லி, விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இந்திய திரை உலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது தனது கணவர் சூர்யா அணிவித்த, இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை, அவர்கள் அன்பின் அடையாளமாக இந்த திருமணத்திலும் அணிந்து வந்திருந்தது வெகுவாக பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அந்த விழாவின் போது சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா பட்டு வேட்டி சட்டையிலும் , ஜோதிகா பிங்க் நிற புடவையிலும் சூர்யாவுடன் இணைந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவி"ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா" சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com