One Of SK Best Performance - அமரன் திரைப்படத்தை புகழ்ந்த ஞானவேல்ராஜா

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
One Of SK Best Performance - அமரன் திரைப்படத்தை புகழ்ந்த ஞானவேல்ராஜா
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமரன் திரைப்படம் பெரியளவு வரவேற்பை பெற்றுள்ளது. அமரன் திரைப்படத்தை பார்த்து பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினர். அதைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல்ராஜ் திரைப்படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com