Once More |கோடையில் திரைக்கு வருகிறது "ஒன்ஸ் மோர்"

Once More |கோடையில் திரைக்கு வருகிறது "ஒன்ஸ் மோர்"
Published on
Summary

அதிதி சங்கர்- அர்ஜூன் தாஸ் நடிப்பில் விரைவில் திரைக்கு வருகிறது ஒன்ஸ் மோர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தின் இசையை ஹேஷம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன் ஹ்ருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஒன்ஸ் மோர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில், ஒன்ஸ் மோர் படம் கோடையில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com