

நடிகர் தனுஷ் நடிப்பில், ‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஓம்: சாப்டர் 1 – உதிரம்: தி பிளட் வுட்'. இத்திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'வாத்தி' திரைப்படத்தை தயாரிப்பாளர் நாகவம்ஷி தலைமையிலான c நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 'லோகா: சாப்டர் 1 – சந்திரா' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' ஆகிய திரைப்படங்களை தெலுங்கில் விநியோகம் செய்து மாபெரும் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், தற்போது தனுஷின் 'ஓம்' படத்தையும் தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
தேசிய விருது பெற்ற முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்து நடித்துள்ள நிலையில், இவர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் மற்றும் சைத்து ஜொன்னலகட்டா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், மிகச் சிறந்த எமோஷனல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக ரசிகர்களுக்கு அமையும் என இயக்குநர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், எழில் அரசு கே ஒளிப்பதிவையும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும், ஏ. பன்னீர்செல்வம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை யானிக் பென் மற்றும் கேச்சா கம்பக்டி வடிவமைத்துள்ளனர்.
வண்டார்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்-டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், நவம்பர் 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.