நவ.4-ல் ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா?

இப்படம் அடுத்த மாதம் 20-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஓம்
Published on: 
Summary

தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4-ந்தேதி சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தகவல். சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள தகவலின் அடிப்படையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீடு

சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான 'அலாக்கா லோவா' மற்றும் ‘வீழா வீரா’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, இத்திரைப்படம் அக்டோபர் 16-ந்தேதி அன்று வெளியாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்துடனான மோதலைத் தவிர்க்கவும், தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் 'சீன்' படத்திற்கு வழிவிடவும், நடிகர் தனுஷ் தனது 'ஓம்' படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் 20-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழா

இந்த நிலையில், ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 4-ந்தேதி சாய் ராம் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com